எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் நிரப்பும் நிலையத்தில் கொள்ளை
கொழும்பு நாவல பகுதியில் இருக்கும் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றுக்கு இன்று அதிகாலை சென்ற கொள்ளையர்கள், அங்கிருந்த ஊழியர்களிடம் இருந்த பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
எரிபொருள் நிரப்ப வந்தவர்கள் போன்று மஞ்சள் நிற கலனுடன் முச்சக்கர வண்டியில் சென்ற 5 பேர் கொண்ட குழு, அங்கிருந்த ஊழியர்களை அச்சுறுத்தி, அவர்களிடம் இருந்த பணத்தை பறித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடக்கும் போது எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்களுடன் மக்கள் வரிசையில் நின்றுக்கொண்டிருந்தனர். கொள்ளையர்கள் எவ்வளவு தொகை பணத்தை கொள்ளையிட்டுச் சென்றனர் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
கொள்ளை சம்பவம் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை பயன்படுத்தி கொள்ளையர்களை அடையாளம் காண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொள்ளையர்களை துரிதமாக கைது செய்ய முடியும் என பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.





சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri
