பொலிஸ் வேடம் அணிந்து வீடுகளுக்கு வரும் கொள்ளையர்கள் - பொது மக்களுக்கு எச்சரிக்கை
நாத்தாண்டிய, துங்கன்னாவ பிரதேசத்தில் தோட்ட உரிமையாளர் ஒருவரின் வீட்டிற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று தோற்றமளித்த 6 பேர் கொண்ட குழுவினர் சென்று, அங்கு பாரிய கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கும்பல் உரிமையாளரை கத்தியால் குத்தி காயப்படுத்திவிட்டு, 10 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்கம் மற்றும் 2 கைத்தொலைபேசிகளை கொள்ளையிட்டு காரில் தப்பிச் சென்றுள்ளனர் என மாரவில தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த தோட்ட உரிமையாளர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். அவரது ஒரு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
பாணந்துறை வலன ஊழல் ஒழிப்பு அதிரடிப் படையினர், பொலிஸ் குழுவாக வேடமணிந்து, காணிக்குச் சொந்தமான தோட்டக்காரரின் வீட்டுக்குள் புகுந்து முதலில் அவரது ஒரு காலில் கத்தியால் குத்தி இந்தக் கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த கொள்ளை கும்பல் பயன்படுத்திய கார் மாரவில பிரதேசத்தில் வீதியொன்றில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்ளைச் சம்பவத்தைச் செய்துவிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை பொலிஸாருக்கு எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் பொலிஸ் வேடம் அணிந்து வீடுகளுக்கு வரும் கொள்ளையர்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
