திருமணத்திற்கு தயாரான மணப்பெண்ணின் வீட்டில் கொள்ளையர்கள் அட்டகாசம்
அளுத்கம பிரதேசத்தில் 8 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகைள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் நடைபெறவிருந்த மகளின் திருமணத்திற்காக தயார் செய்யப்பட்ட தங்க மோதிரம் மற்றும் 8 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சாலியவெவ பொலிஸில் பாதிக்கப்பட்ட பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
தங்க நகை திருட்டு
சாலியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளுத்கம பகுதியிலுள்ள வீடொன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்களே திருடப்பட்டுள்ளன.
திருமணத்தின் போது மாப்பிள்ளைக்காக தயார் செய்யப்பட்ட தங்க மோதிரம், தங்க வளையல் மற்றும் சில தங்க ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் விசாரணை
குடும்பத்தினர் வீட்டில் இல்லாத போது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த தங்க நகை மற்றும் 10ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சாலியவெவ பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரியதர்ஷன உள்ளிட்ட அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.