சிசிரிவி கமராவில் சிக்கிய திருட்டு சம்பவம்! மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்(Video)
வத்தளை, குடாதன்ன பகுதியில் தொடர்ச்சியாக கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக அந்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (15.07.2023) காலை திருட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதன்போது சமையல் எரிவாயு கொள்கலன்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் ஆகியன கொள்ளையிடப்பட்டுள்ளன.
இந்த திருட்டு சம்பவமானது அந்த பகுதியிலுள்ள சிசிரிவி கமராக்களில் பதிவாகியுள்ளது.
அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை
எனவே குறித்த கமராவில் காணப்படும் திருடர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த பகுதி மக்கள் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை குறித்த பகுதிகளில் இடம்பெறும் தொடர் திருட்டு சம்பவங்கள் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் நியாயமான தீர்வு எதுவும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |