மட்டக்களப்பில் 3 வீடுகளை உடைத்து கொள்ளை:ஒருவர் கைது
மட்டு.வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டுமாவடி பிரதேசத்தில் உள்ள 3 வீடுகளை கடந்த 26ம் திகதி அதிகாலையில் உடைத்து தங்கநகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை நாவலடி பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களையும் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருட்டு சம்பவம்

குறித்த பிரதேசத்தின் சந்தை வீதியிலுள்ள வீடு ஒன்றிலும், பி.எச் குறுக்கு வீதியிலுள்ள வீடு ஒன்று உட்பட 3 வீடுகளில் கடந்த 26ம் திகதி அதிகாலையில் சுமார் 2 மணித்தியாலத்துக்குள் யன்னல்களை உடைத்து உள் நுழைந்து அங்கிருந்த 4 பவுண் கொண்ட தங்க ஆபரணங்கள் 2 இலட்சம் ரூபா பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது.
இது தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் மேற்கொண்டு வந்துள்ளனர்.
பணம்,நகை மீட்பு

இந்நிலையில் சந்தேகநபர் கொள்ளையடிக்கப்பட்ட தங்க ஆபரணங்களை தனியார் கம்பனியில் அடகு வைத்த நிலையில் மீட்டுள்ளதுடன் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நேற்று(31) வாழைச்சேனை நீதவான்
நீமின்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவரை 14 நாட்கள் விளக்கமறியலில்
வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri