பாதைச் சேவையை சீரமைக்குமாறு வட மாகாண ஆளுநரிடம் கோரிக்கை

Jaffna Northern Provincial Council Sri Lankan Peoples Jeevan Thiyagaraja
By Theepan Sep 11, 2022 08:22 AM GMT
Report

காரைநகர் - ஊர்காவல்துறை பாதைச் சேவையை சீராக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குறித்த பாதையை பயன்படுத்தும் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அனுப்புவதன் மூலம் மக்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

வீதி அதிகார சபையின் அசமந்தப்போக்கு

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இப்பாதைச் சேவை முறையாக இடம்பெறாமையால் தாங்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ள மக்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபை இவ்விடயத்தில் அசமந்தப்போக்குடன் செயற்படுவதாக குற்றம்ச்சாட்டியுள்ளனர்.

பாதைச் சேவையை சீரமைக்குமாறு வட மாகாண ஆளுநரிடம் கோரிக்கை | Road Problem

காரைநகர் மற்றும் வலிகாமம் மேற்கு, வலிகாமம் தென் மேற்கு உள்ளிட்ட பல இடங்களில் இருந்து ஊர்காவல்துறை, வேலணை மற்றும் தீவுப் பிரதேசத்தில் உள்ள அரச அலுவலகங்களில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களும், அத்துடன் காரைநகர் மற்றும் இதர பிரதேசங்களில் உள்ள அலுவலகங்களுக்கு செல்லும் அரச உத்தியோகத்தர்களும், பொதுமக்களும் தினமும் இப்பாதையை பயன்படுத்துவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

பல சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள மக்கள்

குறித்த கடிதத்தில் மேலும், “எரிபொருள் நெருக்கடியை காரணம் காட்டி கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பாதைச் சேவை இடம்பெறவில்லை.

இக்காலத்தில் தனியார் படகுச் சேவை இடம்பெற்று வருகின்றது. இப்படகு மூலமான பயணம் ஆபத்தானது என்பதுடன் எமது மோட்டார் சைக்கிள்களின் மட்காட், கண்ணாடி, சிக்னல் போன்றன அடிக்கடி உடைந்து சேதமடைகின்றன.

பாதைச் சேவையை சீரமைக்குமாறு வட மாகாண ஆளுநரிடம் கோரிக்கை | Road Problem

மேலும் வாகன அடிச்சட்டமும் பாதிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிள்களை ஏற்றி இறக்கும்போது கீழே வீழ்ந்து உதிரிப்பாகங்கள் சேதமடைகின்ற சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்கின்றன.

அத்துடன் இருவழிக் கட்டணமாக தினமும் 200 ரூபா பணம் செலுத்த வேண்டியுள்ளது.

அதிகரித்துள்ள செலவுகள்

தற்போதைய பொருளாதார நெருக்கடியான காலக்கட்டத்தில் எமது வாகனங்களின் உதிரிப்பாகங்களை அடிக்கடி மாற்றுவது என்பதும், தினமும் 200 ரூபா பணம் செலுத்துவது என்பதும் எங்களை கடுமையாக பாதித்துள்ளது.

இச்சுமையை எங்களால் சுமக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

பாதைச் சேவையை சீரமைக்குமாறு வட மாகாண ஆளுநரிடம் கோரிக்கை | Road Problem

வீதி அதிகார சபையின் பதில்

இந்நிலையில் மண்ணெண்ணெயில் இயங்கக்கூடிய இயந்திரமே தங்களிடம் இருப்பதால் மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள முடியாத காலங்களில் சேவையை மேற்கொள்ள முடியாமல் உள்ளது என வீதி அபிவிருத்தி அதிகார சபை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், பெட்ரோலில் இயங்கக்கூடிய இயந்திரம் ஒன்றையும் வைத்திருப்பதன் மூலம் மண்ணெண்ணெய் இல்லாத நேரங்களில் பெட்றோலில் இயக்கி சேவையை மேற்கொள்ள முடியும் என நம்புகின்றோம் என  வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பதாக  மக்கள் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

மக்களின் கோரிக்கை

எனவே, இவ்விடயத்தில் தாங்கள் அதிகூடிய கரிசனை எடுத்து பாதைச் சேவை தடையின்றி சீராக நடைபெற ஏற்பாடு செய்வதன் மூலம் அரச உத்தியோகத்தர்களினதும் பொதுமக்களினதும் வீண் சிரமங்களுக்கும் பொருளாதார இழப்புகளுக்கும் தீர்வு பெற்றுத்தருமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம் என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரதிகள் யாழ். அரச அதிபர், ஊர்காவல்த்துறை பிரதேச செயலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US