வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்களின் நேர்மையான செயல்(Photo)
மட்டக்களப்பு நகர் பகுதியில் இரு வீதியின் நடுவில் அமைந்துள்ள பூந்தொட்டியில் இருந்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசி மற்றும் பணம்,ஆவணங்கள் உட்பட கைப்பேஸ் என்பவற்றை இன்று(07) கண்டெடுத்த வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் பொலிஸாரிடம் அவற்றை ஒப்படைத்துள்ளனர்.
குறித்த வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் இருவரையும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.கே. ஹொட்டியாராச்சி பாரட்டியுள்ளார்.
சம்பவம்
வீதி அபிவிருத்தி அதிகார சபையில் கடமையாற்றும் இரு உத்தியோகத்தர்கள் இன்று காலை வழமை போன்று பார் வீதியிலுள்ள கொமசியல் வங்கிக்கு முன்னாள் அமைந்துள்ள இரு வீதிகளில் காணப்படும் மணல்களை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது வீதியின் நடுவில் உள்ள பூந்தொட்டியில் கைவிடப்பட்டிருந்து 80 ஆயிரம்
ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசி, அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம்
கடமையாற்றும் திணைக்கள அட்டை மற்றும் பணம் உட்பட கைப்பேஸ் ஒன்றை வீதி
அபிவிருத்தி அதிகார சபையில் கடமையாற்றும் இருவரும் கண்டெடுத்துள்ளனர்.
நேர்மையான செயல்
குறித்த பொருட்கள் மற்றும் ஆவணங்களை உடனடியாக அருகில் இருந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த நேர்மையான செயலை செய்த இருவரையும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாராட்டியுள்ளார்.
இதனையடுத்து கையடக்க தொலைபேசி மற்றும் ஆவணங்களை தவறவிட்டவரை கண்டறிந்து பொலிஸார்
குறித்த பொருட்கள் அவருடையது என உறுதிப்படுத்திய பின்னர் அவரிடம் அவற்றை ஒப்படைத்துள்ளனர்.