வடக்கு மாகாண ஆளுநரை சரமாரியாக கேள்விகளால் தாக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்
"நிர்வாகம் தெரியாத வடக்கு மாகாண ஆளுநர் அடாவடியாக செயற்பட்டு வருகின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், வடக்கு ஆளுநர் மீது சரமாரியாக விமர்சனக்கணைகளைத் தொடுத்துள்ளார்.
"ஜீவன் தியாகராஜா எனப் பெயர் இருந்தாலும் வடக்கு ஆளுநருக்குத் தமிழ் தெரியாது. அவர் தன்னிச்சையாகச் செயற்படுகின்றார். அதிகாரிகளை வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்து, காட்டுத் தர்பார் நடத்துகின்றார்.
திட்டமிட்ட அடிப்படையில் தான் அவர் தமிழர் பகுதிக்கான ஆளுநராக
நியமிக்கப்பட்டுள்ளார். அவரை மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கிழக்கு ஆளுநரும் அப்படித்தான். இவர்களிடம் முறையிட்டுப் பயன் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.