உடையார்கட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அசமந்த போக்கு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் உடையார்கட்டு நகர்பகுதியில் வெள்ளம் வடிந்தோடக்கூடிய வகையிலான சரியான வடிகாலமைப்பு மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
இங்கு முதன்மை வீதியின் இருபகுதிகளிலும் சரியான வடிகால் அமைப்பு இல்லாத காரணத்தினால் வெள்ள நீர் வடிந்தோட முடியாத நிலையில் தேங்கி நிக்கின்றது.
கடந்த பத்து ஆண்டுகளாக இவ்வாறான ஒரு அபாய நிலை காணப்படுவதாகவும் இது தொடர்பில் பல அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதியினை செப்பனிட்டார்கள் ஆனால் நீர் வளிந்தோடக்கூடியவகையிலான வடிகால் அமைப்பினை மேற்கொள்ளாத நிலை தொடர்வதால் அண்மையில் பெய்துகொண்டிருக்கும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர் உடையார்கட்டு மகா வித்தியாலயத்திற்குள் சூழ்ந்து கொண்டுள்ளதுடன் வணிக நிலையங்களுக்கும் மழை வெள்ளம் புகுந்துள்ளது.
இது தொடர்பில் சம்மந்தப்பட்ட திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள்
கோரிக்கை விடுத்துள்ளார்கள்.


பதினாறாவது மே பதினெட்டு 20 மணி நேரம் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
