முல்லைத்தீவில் வாய்காலினுள் இடப்பட்ட கருங்கற்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி
முல்லைத்தீவில் கிராமம் ஒன்றின் வெள்ள அனர்த்த தவிர்ப்பு செயற்பாடுகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் தண்டுவான் கிராம சேவகர் பிரிவினுள் உள்ள வாய்க்கால்களை துப்பரவு செய்வதன் மூலம் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அக்கிராமத்தன் கிராம சேவகர் இது தொடர்பில் கூடிய கவனம் எடுத்துச் செயற்பட்டு வருவதும் அவதானிக்க கூடிய விடயமாக உள்ளது.
மாரி மழையினால் ஏற்படப்போகும் வெள்ளத்தினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை தவிர்த்துக்கொள்ள பரவலாக எல்லா இடங்களிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதையும் அவதானிக்கலாம்.
வாய்க்காலில் கருங்கல்
தண்டுவான் கிராம சேவகர் பிரிவினுள் வாய்க்கால் ஒன்றினை இடைமறித்து கருங்கற்கள் இடப்பட்டுள்ளது.
மதகு ஒன்றிற்கு அண்மையில் அமைந்துள்ள வாய்க்காலினுடாக பாய்ந்து செல்லும் நீரோட்டத்தில் தடங்களை ஏற்படுத்துவதாக இது இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கிராமசேவகர் இவ்விடயத்தினை பார்வையிட்டு அவற்றை அகற்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது போல் கிராமத்தின் ஏனைய வாய்க்கால்களும் பார்வையிடப்படுவதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
பாதையமைப்பு
தோட்ட நிலத்திற்கு வாய்காலினை கடந்து சென்று வருகின்றார். மழையினால் வாய்காலினுள் ஏற்பட்ட நீரோட்டத்தினால் அதனூடான போக்குவரத்து சிரமத்திற்கு உள்ளாகிறது.
இதனால் கருங்கற்களை வாய்காலினுள் போட்டு தோட்டத்திற்கு போய் வரக்கூடிய இலகுவான பாதை அமைக்கப்பட்டது.
ஆயினும் இது வெள்ள நீரோட்டத்தினை பாதிக்கும் என்பதை அந்த விவசாயி கருத்தில் எடுத்திருக்கவில்லை.
இது தொடர்பில் கிராமசேவகர் பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்திருந்தார் என அக்கிராமத்தின் சமூகச் செயற்பாட்டாளர் தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |