நிதி ஒதுக்கப்பட்டும் புனரமைக்கப்படாது தாமதிக்கப்படும் வீதி: பொதுமக்கள் விசனம்
யாழ். வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பண்டத்தரிப்பு வட்டாரத்தில் மிக நீண்டகாலமாக புனரமைப்பின்றி பழுதடைந்து காணப்பட்ட சென் அன்ரனீஸ் லேன் வீதியை புனரமைப்பு செய்வதற்கென முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அ.ஜோன் ஜிப்பிரிக்கோ தனது 2023ஆம் ஆண்டு வட்டார நிதியில் ஒதுக்கீடு செய்திருந்தார்.
இந்நிலையில் மார்ச் மாதமளவில் சபை கலைந்தமையால் பின்வந்த பிரதேசசபை செயலாளர் காலத்தில் இந்த நிதிக்கான வேலையை ஆரம்பிப்பதற்கு வருட இறுதியிலேயே ஒப்பந்த தாரர் ஒருவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தகாரர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் உரிய தர நிர்ணய அடிப்படையில் மூலப்பொருட்கள் பெறாமையினால் ஒப்பந்தகாரரின் ஒப்பந்த காலம் முடிவடைந்ததும் நான்கு மாதங்களாக இவ்வீதிவேலை இழுபறி நிலையில் உள்ளது.
இதனால் அந்த வீதியால் பயணிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமடைவதோடு பல விபத்துக்களும் ஏற்பட்டுள்ளது.
இதனை பிரதேச சபை நிர்வாகத்திற்கு எடுத்துரைத்தும் இதுவரை நடவடிக்கை எதுமில்லாதினால் பொதுமக்கள் விசனமடைந்துள்ளார்கள். 13ஆம் திகதி பண்டத்தரிப்பிற்கு வருகைதரும் மடுமாதா சொரூபம் இப்பாதை வழியே சில்லாலைக்கு பயணிக்க உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |