லங்காகமாவிலிருந்து நெலுவவிற்கான வீதி அமைப்பு பணிகள் நிறைவு - நெடுஞ்சாலை அமைச்சர்
சிங்கராஜா உலக பாரம்பரியத்துடன் தொடர்புடைய லங்காகமாவிலிருந்து நெலுவவிற்கான வீதி சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
98% பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் மக்களின் பாவனைக்காகக் கையளிக்கப்படவுள்ளதாகவும் ஆளும் தரப்பு பிரதம கொரடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
லங்காகம - நெலுவ வீதியின் தற்போதைய நிலைமை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இந்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சிகள் தலைமையிலான ஏனைய எதிரான அரசியல் கட்சிகள் லங்காகம முதல் நெலுவ வரையில் வீதி நிர்மாணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த சாலை அமைக்க வீதி நிர்மாணிக்கப்படும் போது அவர்கள் யாரும் அதனை வரவேற்கவில்லை. இதைப் பார்க்க வரவில்லை.
நெடுஞ்சாலைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற முறை வகையில், லங்காகமவுக்கு சென்று இந்த வீதி எப்படி நிர்மாணிக்கப்படுகிறது என்று பார்க்க வருமாறு நான் பலமுறை நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் கோரினேன்.
அங்கு செல்வதற்கு வாகனம் மற்றும் மற்ற அனைத்து வசதிகளையும் வழங்குவதாகவும் கூறினேன்.
ஆனால் எதிர்க்கட்சிகள் என்ன செய்தன.ஜேவிபி மற்றும் பல்வேறு தனிநபர்களை ஒன்றிணைத்து கொழும்பில் இந்த வீதி அமைப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் தான் செய்தன. மரங்கள் வெட்டப்படுகின்றன. இதன் மூலம் சிங்கராஜா அழிக்கப்படுகிறது என்றார்கள்.
எங்கே அவ்வாறு நடந்ததா? இந்த வீதியை நிர்மாணிப்பதற்காக சிங்கராஜா வனப்பகுதியில் ராஜபக்சவினர் மரங்களை வெட்டி வீழ்த்துவதாக அவர்கள் உலகம் முழுவதற்கும் கூறினார்கள்.
இந்த வீதியை அமைக்க நாங்கள் எந்த மரத்தையும் வெட்டவில்லை.இந்த வீதி நிர்மாணிப்பணிகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நேரடி மேற்பார்வையின் கீழ் இலங்கை ராணுவத்தின் பொறியியல் படையணியால் மேற்கொள்ளப்படுகிறது. நிர்மாணப்பணிகள் 98% நிறைவடைந்துள்ளன.
விரைவில் மக்களின் பாவனைக்காக இதனைக் கையளிக்க இருக்கிறோம். கோவிட் நிலையிலும் இந்த வீதியை நிர்மாணிப்பதற்கு உந்துசக்தி அளிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு நன்றி தெரிவிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.










அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
