இலங்கையில் மக்கள் மீது மோதித்தள்ளிய வாகனம் - 3 பேர் பலி - பெண்ணால் ஏற்பட்ட விபரீதம்
கம்பளையில் வீதியில் சென்ற பெண்கள் மீது வாகனம் ஒன்று மோதியமையால் ஏற்பட்ட விபத்தினால் மூன்று பெண்கள் உயிரிழந்தனர்.
விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
வாகன பயிற்சியில் ஈடுபட்ட பெண் ஒருவர் தவறான முறையில் வாகனத்தை செலுத்தியமையே விபத்துக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்ணால் ஏற்பட்ட விபரீதம்
வேகமாக வந்த கார் ஒன்று முன்னால் சென்ற லொறியை முந்திச் செல்ல முயன்ற போது பிரேக்கைப் பிடித்ததாக நினைத்து, எக்ஸ்லேட்டரை அழுத்தியமையினால் வீதியில் சென்றவர்கள் மோதுண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அருகிலுள்ள விகாரைக்கு சென்ற நிலையில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த பெண்கள் மீது மோதியமையால் மூன்று பேர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
