இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி பாம்பன் பாலம் முன் போராட்டம்

Indian fishermen India Sri Lanka Navy
By Ashik May 23, 2026 04:06 AM GMT
Report

இலங்கைச் சிறையில் உள்ள பாம்பன் விசைப்படகு கடற்றொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கடற்றொழிலாளர்களின் உறவினர்கள் நேற்று(22) பாம்பன் பாலம் முன்பு வீதியில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் குறித்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் தலைவரின் உடலுக்கு என்ன நடந்தது..! சரத் பொன்சேகா பகிரங்கப்படுத்திய பரபரப்பான உண்மைகள்

விடுதலைப்புலிகளின் தலைவரின் உடலுக்கு என்ன நடந்தது..! சரத் பொன்சேகா பகிரங்கப்படுத்திய பரபரப்பான உண்மைகள்

போக்குவரத்து பாதிக்கப்பட்டதால்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்றொழிலுக்குச் சென்று கடந்த பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி இலங்கை மன்னார் வடக்கு கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஒரு படகையும் அதிலிருந்த  12 கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து நீர்கொழும்பு மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி பாம்பன் பாலம் முன் போராட்டம் | Road Blockade In Front Of Pamban Bridge

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் கடற்றொழிலாளர்கள் 12 பேரும் தொடர்ந்து ஏழாவது முறையாக நீதிமன்ற காவலில் நீடிக்கப்டடு 90 நாட்களுக்கு மேலாக விசாரணை கைதிகளாக இருப்பதால் கடற்றொழிலாளர்களின் வழக்கை துரிதமாக நடத்தி விரைந்து கடற்றொழிலாளர்களையும் படகையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினர் பாம்பன் பாலத்திற்கு முன் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரம் செல்லும் பிரதான வீதியில் குறித்த குடும்பத்தினர், கடற்றொழில் பிரதிநிதிகள், கடற்றொழிலாsர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராமநாதபுரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் பொலிஸார் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பாம்பன் சாலை பாலத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது

மேலும் தமிழக அமைச்சரவையில் கடற்றொழில் சமுதாயத்தை சேர்ந்த தூத்துக்குடி த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் மீன்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு கடற்றொழிலாளர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி பாம்பன் பாலம் முன் போராட்டம் | Road Blockade In Front Of Pamban Bridge

அதேவேளை பிரதமரை சந்திக்கும் தமிழக முதல்வர் விஜய் கடற்றொழிலாளர்கள் விடுதலை குறித்து பிரதமரிடம் பேசி நல்ல முடிவை பெற்று தர வேண்டும்.

பொலிஸ் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையால் கடற்றொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக மீளப்பெறுவதாகவும், 27ஆம் திகதி கடற்றொழிலாளர்களின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது கடற்றொழிலாளர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய போராட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கூடுதல் வரி விதிக்கப்பட முன் இறக்குமதிக்குத் தயாரான வாகனங்களுக்கும் வரி - வெளியான தகவல்

கூடுதல் வரி விதிக்கப்பட முன் இறக்குமதிக்குத் தயாரான வாகனங்களுக்கும் வரி - வெளியான தகவல்

இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி பாம்பன் பாலம் முன் போராட்டம் | Road Blockade In Front Of Pamban Bridge

இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி பாம்பன் பாலம் முன் போராட்டம் | Road Blockade In Front Of Pamban Bridge

மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US