கூடுதல் வரி விதிக்கப்பட முன் இறக்குமதிக்குத் தயாரான வாகனங்களுக்கும் வரி - வெளியான தகவல்

Anura Kumara Dissanayaka President of Sri lanka vehicle imports sri lanka
By Aanadhi May 23, 2026 02:26 AM GMT
Report

வாகன இறக்குமதி தொடர்பில் 50வீதம் கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்ட 15ஆம் திகதிக்கு முந்தைய நாளான, 14ஆம் திகதி திறக்கப்பட்ட கடன் பத்திரங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீதும் குறித்த கூடுதல் வரி விதிக்கப்படவுள்ளது.

வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 50வீதம் கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.

ரணிலை சந்தித்த அரசதரப்பின் முக்கியப்புள்ளி..! சூடு பிடிக்கும் தென்னிலங்கை

ரணிலை சந்தித்த அரசதரப்பின் முக்கியப்புள்ளி..! சூடு பிடிக்கும் தென்னிலங்கை

தற்போது விதித்துள்ள 50வீத கூடுதல் வரி

15ஆம் திகதி, ஜனாதிபதி இந்தக் கூடுதல் கட்டணத்தைக் குறிப்பிட்டு ஒரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

எனினும் அதற்கு முன்னர், ஜனாதிபதிக்கு நெருக்கமான 3 நிறுவனங்கள் 14ஆம் திகதி 4,000 வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக கடன் பத்திரங்களைத் திறந்திருந்ததாக எதிர்க்கட்சிகள் வலுவான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.

கூடுதல் வரி விதிக்கப்பட முன் இறக்குமதிக்குத் தயாரான வாகனங்களுக்கும் வரி - வெளியான தகவல் | Tax Applies Vehicles Import Before Additional Tax

அதன்படி, ஜனாதிபதியின் இந்த முடிவை அந்த நிறுவனங்கள் முன்கூட்டியே அறிந்திருந்தன என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.

ஆனால் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் வெளியாவதற்கு முன்னதாக கடன் பத்திரங்கள் திறக்கப்பட்டுள்ள ஒரு சில வாகனங்களுக்கும் ஜனாதிபதி தற்போது விதித்துள்ள 50வீத கூடுதல் வரி விதிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது.

வாகன இறக்குமதி

அதன்படி, ஒரு வாகனத்தைத் தயாரித்து, அதன் அடித்தட்டு (சேசிஸ்) எண்ணைக் கடன் பத்திரத்தில் சேர்ப்பதற்குப் பல வாரங்கள் ஆவதால், வாகனத்திற்கான இறக்குமதிக் கட்டளை இடப்பட்ட திகதியில் வரி விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

கூடுதல் வரி விதிக்கப்பட முன் இறக்குமதிக்குத் தயாரான வாகனங்களுக்கும் வரி - வெளியான தகவல் | Tax Applies Vehicles Import Before Additional Tax

கடன் பத்திரங்கள் திறக்கப்பட்டு சில நாட்கள் அல்லது வாரங்களின் பின்னரே குறித்த கடன் பத்திரத்தில் வாகன அடித்தட்டு இலக்கம் போன்ற விபரங்கள் உள்ளடக்கப்படுவது வழமையாகும்.

அத்துடன் கடன் பத்திரங்களில் அடித்தட்டு இலக்கம் அல்லது எந்தவொரு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் குறித்த வாகனங்களுக்கும் 50வீதம் மேலதிக வரி விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சுங்கப் பிரிவினருக்கு விசேட சுற்று நிருபம் ஊடாக ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் இந்த முடிவின் மூலம், மே 14ஆம் திகதி கடன் பத்திரங்கள் திறக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்களும் கூடுதல் கட்டணத்தை மட்டுமல்லாமல், அது தொடர்பான பிற வரிகளையும் செலுத்த வேண்டியிருக்கும்.

கிழக்கில் ஆயுத பயிற்சி:நடக்கப்போகும் பாரிய அசம்பாவிதங்கள்!

கிழக்கில் ஆயுத பயிற்சி:நடக்கப்போகும் பாரிய அசம்பாவிதங்கள்!

ட்ரம்பின் முரண்பட்ட முடிவுகளால் நேட்டோ உறுப்பு நாடுகளிடையே எழுந்துள்ள குழப்பம்

ட்ரம்பின் முரண்பட்ட முடிவுகளால் நேட்டோ உறுப்பு நாடுகளிடையே எழுந்துள்ள குழப்பம்


மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US