மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயிற்கும் மகளுக்கும் அதிர்ச்சி : மகள் பலி
தலதாகம்மன கெபிலிதிகொட புராதன விகாரைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த மாணவி குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீதியின் நடுவில் கவிழ்ந்த மோட்டார் சைக்கிள்
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மாணவியின் தாயும் படுகாயமடைந்த நிலையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்தபத்து முல்லை பிரதேசத்தை சேர்ந்த ஹிமாயா கருணாரத்ன என்ற மாணவியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மாணவி தனது தாயார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்த போது மோட்டார் சைக்கிள் வீதியின் நடுவில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீதியில் கவிழ்ந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்திசையில் வந்த பேருந்து மோதியதில் தாய் மற்றும் மகள் இருவரும் படுகாயமடைந்து குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மகள் உயிரிழந்துள்ளார்.





தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
