மில்லியன் டொலர் முதலீடு: இலங்கைக்கு வருகிறது அமெரிக்க தயாரிப்பு
அமெரிக்காவின் பெட்ரோலியப் பொருட்களின் விநியோகஸ்தரான RM Parks Inc. நிறுவனம் தனது செல்(Shell) தயாரிப்புகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக இலங்கை முதலீட்டு சபையுடன் 110 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
RM Parks Inc. மற்றும் Shell கூட்டாண்மையூடாக 200 பெட்ரோல் நிரப்பு நிலையங்களை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மின்சாரத்தில் இயங்கத்தக்க வாகனங்களுக்கான EV மின்னேற்றல் வசதிகளுடன் சிறிய பல்பொருள் அங்காடிகளில் சேவைகளை வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக முதலீட்டு சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முதலீட்டு சபை அறிக்கை
இந்த ஒப்பந்தத்தின் பெறுமதி 110 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை முதலீட்டு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சிறியளவிலான பல்பொருள் அங்காடிகள் மற்றும் மின்னேற்றம் செய்யும் வசதிகளும் ஏற்படுத்தப்படும் என இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |