ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் செய்ன் நதியில் குளிக்க அனுமதிக்கப்பட்ட மக்கள்
பாரிஸில் உள்ள பிரசித்திப் பெற்ற செய்ன் நதி நீச்சல் வீரர்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்காக பல பில்லியன் யூரோக்களுக்கு மேல் செலவழிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் திட்டத்திற்குப் பிறகு இந்த நதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
செய்ன் நதி
சுமார் ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் முதல் முறையாக பிரெஞ் மக்கள் இந்த நதி நீரில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நகரின் வரலாற்று மையத்தில் உள்ள பிராஸ் மேரி வலயத்தில் இன்று காலை 8 மணிக்கு (GMT 06:00) திறப்பு விழாவிற்கு முன்னதாக பல்லாயிரம் மக்கள் வந்து தண்ணீரில் குதித்துள்ளனர்.
இந்த இடங்களில் மக்களுக்கான அறைகள், குளியல் வசதிகள் மற்றும் கடற்கரை பாணியிலான இருக்கைகள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தடை நீக்கம்
ஒரே நேரத்தில் 150 முதல் 300 பேர் வரை நீந்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
L’un de mes prédécesseurs, alors Maire de Paris, a rêvé d’une Seine où chacun pourrait nager. Demain sa promesse sera tenue.
— Emmanuel Macron (@EmmanuelMacron) July 4, 2025
C’est un héritage des Jeux olympiques et paralympiques de Paris après 100 ans d’interdiction, un travail collectif, une fierté pour le pays.
Merci… pic.twitter.com/KhymFPgIy1
பாதுகாப்பிற்காக, நீந்தும் இடங்களுக்கு வெளியே செல்வோருக்கு அபராதம் விதிக்கும் சட்டம் ஜூன் மாதம் கொண்டு வரப்பட்டுள்ளது.
1923இல் செய்ன் நதியில் பொதுமக்கள் நீந்துவதை தடைசெய்த பிறகு, 1988-ஆம் ஆண்டு, பாரிஸ் நகரின் முன்னாள் மேயரான ஜாக் சிறாக், இந்தத் தடையை நீக்க வேண்டும் என கோரியிருந்தார் தற்போது அந்த கனவு நனவாகியுள்ளது.
இது ஒரு கூட்டு முயற்சியின் வெற்றி மற்றும் பிரான்ஸின் பெருமை,” என ஜனாதிபதி இமானுவேல் மெக்ரொன் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.





இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
