முக்கிய அமைச்சர்கள் மீது விசாரணைகளை ஆரம்பித்த குற்றப் புலனாய்வுத்துறை
பத்து முன்னாள் மற்றும் இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான தகவல்களை மழுங்கடிப்பதற்காக மதுபான நிறுவனத்திடமிருந்து மில்லியன் கணக்கான ரூபாய் உட்பட பல்வேறு சலுகைகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
பிணைமுறி மோசடி
இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த பத்து பேரில் உள்ளடங்குவதாகத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிணைமுறி மோசடியை கடுமையாக விமர்சித்தனர், ஆனால் மதுபான நிறுவனத்திடமிருந்து பணம் உட்பட பல்வேறு சலுகைகளைப் பெற்ற பிறகு, அவர்கள் விமர்சிப்பதை நிறுத்திவிட்டு மழுங்கடிக்கும் செயற்பாட்டை மேற்கொண்டதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறை ஏற்கனவே அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபான நிறுவனத்தால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பல காசோலைகளைக் கண்டறிந்துள்ளது.
அந்த காசோலைகள் தொடர்பான விசாரணைகள் புதிய கோணத்தில் ஆரப்பித்துள்ளதாகத் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 மணி நேரம் முன்

வெளித்தோற்றத்தால் அனைவரையும் கவரும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
