ஐந்து பேரை காவு கொண்ட கொள்ளுப்பிட்டி விபத்து: பிறப்பிக்கப்பட்டது புதிய உத்தரவு
சீரற்ற காலநிலையால் நிலவும் ஈரமான சூழ்நிலையால், முறிந்துவிழும் அபாயத்தில் உள்ள சாலையோர பெரிய மரங்கள் குறித்து உடனடி ஆய்வு மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் பொது மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் அச்சுறுத்தல் உள்ள மரங்களை அக்கற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையொன்றின் மூலம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
அத்துடன் இந்த நடவடிக்கைக்காக சுற்றுச்சூழல் அதிகாரசபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) மற்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் இன்று அதிகாலை பேருந்தொன்றின் மீது பாரிய மரம் விழுந்தமையால் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்ததையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri
