டெல்டா திரிபு நாட்டில் பரவலாக பரவும் ஆபத்து
இலங்கையில் கோவிட் வைரஸின் டெல்டா திரிபு பரவலாக பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் டெல்டா திரிபு முக்கியமான திரிபாக மாறி வருகிறது. இலங்கை மாத்திரம் இதில் இருந்து விடுபட முடியாது என நான் நினைக்கின்றேன்.
இதனால், டெல்டா திரிபு இலங்கைக்குள் பரவலாக பரவாலாம் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். எனினும் எமக்கு தற்போது கிடைத்து வரும் சைனாபார்ம், எஸ்ராசேனிகா, மொடர்னா, சைப்பர் மற்றும் ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகள் டெல்டா திரிபில் இருந்து தப்பிக்க விசேட தற்காப்பு தடுப்பூசி என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு டெல்டா திரிபு தொற்றினாலும் பாதிப்பு குறைவாகவே இருக்கும். இதனால் தடுப்பூசி மிகவும் முக்கியமானது.
அதேபோல் தென் அமெரிக்காவின் பெரு நாட்டை கேந்திரமாக கொண்டு உருவாகியுள்ள லெம்டா என்ற திரிபு பல நாடுகளில் பரவி வருகிறது.
அதேபோல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பரவ ஆரம்பித்த எப்ஸ்சலைன் என அழைக்கப்படும் மற்றுமொரு புதிய திரிபு தற்போது பல நாடுகளில் பரவி வருகிறது.
இவை அனைத்து குறித்தும் நாங்கள் அவதானத்துடன் இருந்து வருகிறோம் என சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
படு மாஸாக விஜய் வீட்டில் நடக்கும் காவேரியின் வளைபாப்பு... மகாநதி சீரியல் படப்பிடிப்பு தள வீடியோ இதோ Cineulagam