நாட்டில் புதிய கோவிட் கொத்துக்கள் உருவாகும் அபாயம்! சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை
கோவிட் நோய்த்தொற்றுகள், இலங்கையில் குறைந்து வரும் போக்கு காணப்பட்டாலும், நாட்டில் எப்போதும் புதிய கொத்துக்கள் உருவாகும் அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் ஹேமந்த ஹேரத், எந்தவொரு தொற்று நோயிலும் , சூழ்நிலைக்கு ஏற்ற இறக்கங்களை காணலாம். எனினும் தற்போது நாடு முக்கியமான கட்டத்தில் உள்ளது என்று கூறினார்.
தற்போது கோவிட் தொற்று குறைந்து வரும் போக்கு, நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக அர்த்தப்படாது. எதிர்வரும் கால கட்டத்தில் மக்கள் பொறுப்பற்ற முறையில் மற்றும் அலட்சியமாக நடந்து கொண்டால் நிலைமை பயங்கரமாக இருக்கும் என்று அவர் கோடிட்டுக் காட்டினார்.
இதுபோன்ற சூழ்நிலையில், மக்கள் தங்கள் அன்றாட வேலைகளின் போது மிகவும் கவனமாகவும், பொறுப்பாகவும் இருக்க வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையை அதிகாரிகள் அறிவிக்கும் வரை மக்கள் சுற்றுலாக்கள் அல்லது யாத்திரைக்கு செல்ல வேண்டாம் என்று கோருவதாக ஹேரத் குறிப்பிட்டார்.
முடக்கல் கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்துவதால், மக்கள் சந்தைகளிலும் பொது
இடங்களிலும் திரள ஆரம்பித்துள்ளனர் .பலர் சுகாதார விதிகளை மீறுவதைக் காண முடிகிறது. எனவே நாடு தொற்றுநோயின்
மற்றொரு தீவிர அலைகளை எதிர்கொள்ளக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக ஹேமந்த
ஹேரத் தெரிவித்துள்ளார்.





அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam

அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri
