மத்திய கிழக்கில் போர் தொடர்ந்தால் இலங்கைக்கு காத்திருக்கும் சிக்கல்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மத்திய கிழக்கு போர் காரணமாக இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் இருப்பதாக பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், நாட்டில் அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விலைகளும் சுமார் பதினைந்து சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
உணவுப்பாதுகாப்பு நடவடிக்கை
இந்த சூழலில், கீழ் நடுத்தர வர்க்கம் மேலும் வீழ்ச்சியடையும் என்றும், பல்வேறு நபர்களைச் சார்ந்திருக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்த அதுகோரல,
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு உலகின் பல நாடுகள் உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தபோதிலும், இலங்கை இன்னும் அத்தகைய நிலையை எட்டவில்லை என்று கூறியுள்ளார்.
மத்திய கிழக்கில் போர் தொடர்ந்தால், நாட்டில் பெரும் உணவு நெருக்கடியைத் தவிர்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம்! விமானியை பிடித்தால் பரிசு - நேரடி மோதல் வெடிக்கும் அபாயம்
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri