இலங்கையின் முக்கிய அரச வங்கி மூடப்படும் நெருக்கடி நிலையில்! வெளியான எச்சரிக்கை (Video)
இலங்கையில் உள்ள அரச வங்கி பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கி இருப்பதாக என மூத்த பத்திரிக்கையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் உள்ள அரச வங்கி பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கி இருக்கின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றும் போதும் கூட இத்தகவலை மறைமுகமாக இதனை கூறியுள்ளார். பல வங்கிகளினுடைய இறுக்கமான நிலையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் வெளிப்படையாக அறிந்தவகையில் சில வங்கிகள் மூடப்படக்கூடிய நிலைக்கு வந்துள்ளன. சில தனியார் வங்கிகள் 6 பில்லியன் ரூபா வரை அரசாங்கத்திற்கு கடன் கொடுத்துள்ளன. குறிப்பாக தனியார் வங்கி கொடுத்ததாக சொல்கின்றார்கள் ஆனால் மீண்டும் அந்த பணத்தை அரசாங்கம் அந்த வங்கிக்கு திருப்பி கொடுக்கும் சந்தர்ப்பம் இல்லை.
அப்படியான நிலைகள் இருக்கின்ற போது அந்த தனியார் வங்கிகள் தொடர்ச்சியாக இயங்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றதா? இல்லையா? என்ற கேள்வி எழுகின்றது. எனவும் அவர் கூட்டிக்காட்டியுள்ளார்.
இந்த இலங்கை கிரிக்கெட் வீரரே என் குழந்தைக்கு தந்தை - நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெண் News Lankasri
சக்தி கிடைக்காத துயரத்தில் ஜனனிக்கு ஏற்பட்ட சோகம், அறிவுக்கரசியின் ஆட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam