சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் : வசந்த அத்துகோரள- செய்திகளின் தொகுப்பு (Video)
சராசரியாக 9 இலட்சம் குடும்பங்கள் அன்றாட உணவை பெற்றுக்கொள்ளக் கூட வழியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர், வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள 17 இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில், 9 இலட்சம் குடும்பங்கள் ஒரு வேளை உணவு அல்லது இரண்டு வேளை உணவு மாத்திரம் உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, நாட்டில் உள்ள 9 இலட்சத்து 35 ஆயிரம் சிறுதொழில் நிறுவனங்களில் 2 இலட்சத்து 80 ஆயிரம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. மேலும், பொருளாதார நெருக்கடியால் 20 சதவீத சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தில் இருக்கிறது" எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களையும் மற்றும் பல செய்திகளையும் இணைத்து வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri