நாட்டில் மீண்டுமொரு அபாயம்! வெளியானது எச்சரிக்கை
மீண்டும் கோவிட் அலை ஏற்படும் அபாய நிலை உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய தொற்று நோய் விஞ்ஞான நிறுவகத்தின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம எச்சரித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது தேசிய தொற்றுநோய் விஞ்ஞான நிறுவகத்தின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரு வாரங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை, சற்று அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக மீண்டும் கோவிட் அலை ஏற்படக்கூடும் என்ற ஐயம் நிலவுகிறது. நாட்டின் பல பகுதிகளில் ஒமிக்ரோன் திரிபுடனான கோவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஒமிக்ரோன் திரிபானது மிக இலகுவாக பரவக்கூடியது.
அறிகுறிகள் குறைந்துள்ள போதிலும், பெரும்பாலானோருக்கு அந்த திரிபு தொற்றக்கூடும் என தேசிய தொற்று நோய் விஞ்ஞான நிறுவகத்தின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியல் களம் சர்வதிகாரத்தை நோக்கி நகருகிறதா! 23 மணி நேரம் முன்

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் டிரம்ப் - ஜெலென்ஸ்கி சந்திப்பு: உலக அரசியலில் பரபரப்பு News Lankasri
