பட்டாசு உள்ளிட்ட வெடிபொருட்களின் விலைகள் உயர்வு
வரவிருக்கும் தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பட்டாசு உட்படக் கேளிக்கை வெடிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக, உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
வெடிபொருட்கள் செய்வதற்கான மூலப்பொருட்களின் விலைகள் மற்றும் உற்பத்திச் செலவு அதிகரித்தமையே இதற்கு காரணமாகும்.
அவற்றை உற்பத்தி செய்வதற்கு அவசியமான வெடிமருந்துகள் உள்ளிட்ட மூலப்பொருட்களுக்கு, பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தங்களது தொழிலை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் பலர் தங்களது தொழில் துறையை விட்டு விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அதிகமானோர் பட்டாசு உட்படக் கேளிக்கை வெடிபொருட்களின் உற்பத்தியில் ஈடுபட்டனர்.
எனினும் தற்போது ஒரு சிலர் மாத்திரமே இந்த தொழில் துறையை முன்னெடுக்கின்றனர்.
இவ்வாறான காரணங்களால் வெடிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri