ஆறாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் கறுவாப்பட்டை
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில், கறுவா, ஏலக்காய் மற்றும் மிளகு ஆகியவற்றின் விலைகளும் வெகுவாக அதிகரித்துள்ளன.
கடுமையாக உயர்ந்துள்ள விலைகள்

இதன்படி, ஒரு கிலோ கிராம் கறுவாப்பட்டை 3,900 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ கிராம் விசேட வகை கறுவா 5,000 முதல் 6,000 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் செய்கையாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ கிராம் மிளகு 1,300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு கிலோ கிராம் ஏலக்காய் 2,300 ரூபா முதல் 2,400 ரூபாவிற்கு இடைப்பட்ட விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam