அதிகரிக்கும் வெப்பம்: வெளியான முக்கிய எச்சரிக்கை
பல மாவட்டங்களில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை கடும் வெப்பமான வானிலை நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன் காரணமாக, கடும் வெயிலுக்கு மத்தியில் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என பாடசாலை விளையாட்டு வீரர்களுக்கு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
எச்சரிக்கை
நாட்டில் நிலவும் இடைப் பருவக்காற்று காலநிலை காரணமாக, கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் நாட்டின் பல பகுதிகளில் தற்போது கடும் வெப்பமான வானிலை நிலவுகிறது.

இதன் விளைவாக மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலையானது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தை எட்டியுள்ளது.
வெப்பச் சுட்டெண்ணின்படி, இந்த மதிப்பானது 45 இற்கும் அதிகமானது என்பதோடு, இது 'அதிக அவதானம்' செலுத்த வேண்டிய மட்டமாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri