ஆடம்பர வாழ்க்கையை தவிர்த்த ரிஷி சுனக்:வெளிவரும் காரணம்
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக, இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனாக் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் பதவியேற்ற பின்னர் பல தீர்மானங்கள்,கொள்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை இவரின் அரசாங்கத்தில் பணிபுரிய விருப்பமின்மையால் பலர் பதவி விலகியுள்ளனர். இன்னும் சிலர் பெரும் ஆதரவையும் பாராட்டுக்களையும் வழங்கியுள்ளனர்.
சிறிய குடியிருப்பில் குடியேறல்
இந்நிலையில் ஆடம்பர பங்களாவில் குடும்பத்துடன் வசித்து வந்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், தற்போது தனது குடும்பத்துடன் பிரதமர் அலுவலக சிறிய பிளாட்டில் குடியேற உள்ளார்.
பிரதமரான பின், ரிஷி சுனக் தனது குடும்பத்துடன் பிரதமர் அலுவலக இல்லமான நம்பர் 10, டவுனிங் ஸ்ட்ரீட் பகுதியில் குடியேற இருக்கிறார். இந்த இல்லமானது சற்று சிறிய குடியிருப்பு என கூறப்படுகிறது.
முன்னதாக ஆடம்பர பங்களாக்கள் வைத்துள்ள ரிஷி சுனக் ,பிரதமரின் அரசு இல்லம் மற்றும் அதிகாரப்பூர்வ அலுவலகமாகவும் செயல்படுவது வழக்கம் என்பதால் சிறிய பிளாட்டில் வசிக்க வேண்டியதுள்ளதாக கூறப்படுகிறது.
பிரித்தானிய புதிய பிரமதர் ரிஷி சுனக்கிடம் உள்ள ஆடம்பர கார்கள்! வெளியான பட்டியல் |