பிரித்தானிய புதிய பிரமதர் ரிஷி சுனக்கிடம் உள்ள ஆடம்பர கார்கள்! வெளியான பட்டியல்
பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக்கிடம் உள்ள ஆடம்பர கார்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, ரிஷி சுனக்கிடம் தற்சமயம் லேண்ட் ரோவர் டிஸ்கவரி, ஜாகுவார் எக்ஸ்.ஜே மற்றும் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் எம்கே6 ஜிடிஐ என 3 பிரபலமான லக்சரி கார்கள் உள்ளன.
லேண்ட் ரோவர் டிஸ்கவரி
ரிஷி சுனக்கின் கேரேஜில் உள்ள ஆற்றல்மிக்க எஸ்யூவி கார் ஆகும்.
பின்பக்கத்தில் நிலையான பனோராமிக் கண்ணாடி சன்ரூஃப்-ஐயும், முன்பக்கத்தில் ஸ்லைடிங் பனோராமிக் சன்ரூஃப்-ஐயும் அசரடிக்கக்கூடிய அம்சங்களாக டிஸ்கவரி காரில் லேண்ட் ரோவர் நிறுவனம் வழங்குகிறது. இவ்வாறு சவுகரியத்தில் மட்டுமில்லாமல், வலிமையான என்ஜினினாலும் டிஸ்கவரி அறியப்படுகிறது.
இந்த லேண்ட் ரோவர் எஸ்யூவி காரில் 3.0 லிட்டர் 6 கொள்கலன் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் மூலமாக அதிகபட்சமாக 355 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை பெற முடியும்.
இந்த எஸ்யூவி காரில் 0வில் இருந்து 96kmph வேகத்தை குறைந்தப்பட்சமாக வெறும் 7.6 வினாடிகளில் எட்டிவிட முடியும். காரின் உயர் வேகம் மணிக்கு 193கிமீ ஆகும்.
ஜாகுவார் எக்ஸ்.ஜே
பிரிட்டனில் உருவாக்கப்படும் அதி செயல்திறன்மிக்க ஜாகுவார் தயாரிப்புகளுள் ஒன்று. குறிப்பாக, பிரிட்டனில் ஜாகுவார் கார்கள் மிக பிரபலமானவைகளாக விளங்குகின்றன.
இதனாலேயே ஜாகுவார் கார்களின் விலை அங்கு அதிகமாக உள்ளதால், ரிஷி சுனக் வைத்திருக்கும் மிகவும் விலைமிக்க கார்களுள் ஒன்று ஜாகுவார் எக்ஸ்.ஜே ஆகும்.
பிரிட்டனில் இந்த ஜாகுவார் காரின் ஆரம்ப விலை 76,995 டாலர்களாக உள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.63.54 லட்சம். லேண்ட் ரோவர் டிஸ்கவரிக்கு இணையாக இந்த காரிலும் 3 லிட்டர் வி6 டர்போசார்ஜ்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.
இந்த என்ஜின் மூலமாக அதிகப்பட்சமாக 225எச்பி வரையிலான இயக்க ஆற்றலை கார் பெற முடியும். ஜாகுவார் எக்ஸ்.ஜே மாடலின் உயர் வேகம் 254kmph ஆகும்.
ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் எம்கே6 ஜிடிஐ
உலகளவில் பிரபலமான ஃபோக்ஸ்வேகன் ஹேட்ச்பேக் கார்களுள் ஒன்று கோல்ஃப் எம்கே6 ஆகும். இதற்கு முக்கிய காரணம், இந்த காரின் குறைவான விலையும், அதேநேரம் ஆற்றல்மிக்க என்ஜினும் ஆகும்.
பிரிட்டன் நாட்டில் கோல்ஃப் எம்கே6 காரின் விலைகள் வெறும் 29 ஆயிரம் டொலர்களில் இருந்து ஆரம்பிக்கின்றன. இந்திய ரூபாயில் பார்த்தோமேயானால், இதன் மதிப்பு ரூ.24 லட்சம் மட்டுமே.
பிரிட்டன் பொருளாதாரத்தை பொருத்தவரையில் விலை இவ்வளவு குறைவாக இருப்பினும், இந்த காரில் ஆற்றல்மிக்க 2 லிட்டர் இன்லைன் 4-சிலிண்டர் டர்போ என்ஜின் வழங்கப்படுகிறது.
இந்த என்ஜினில் இருந்து அதிகப்பட்சமாக 207 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். இதனாலேயே இந்த காரில் என்ஜினை ஸ்டார்ட் செய்து 96kmph வேகத்தை குறைந்தப்பட்சமாக வெறும் 6.9 வினாடிகளில் அடைந்துவிட முடியும். ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் எம்கே6 காரை அதிகபட்சமாக மணிக்கு 240கிமீ வேகத்தில் இயக்கி செல்ல முடியும்.
இவ்வாறான ஆற்றல்மிக்க கார்களையும், அதேநேரம் எளிமையான கார்களையும் வைத்துள்ள ரிஷி சுனக் தற்போதைய பிரித்தானிய பிரதமராக ஆட்சிப் பீடம் ஏறியுள்ளார்.
பிரிட்டனின் செல்வ செழிப்பான மனிதர்கள் அட்டவணையை சமீபத்தில் அங்குள்ள ஓர் பிரபலமான செய்தி நிறுவனம் வெளியிட்டது. அதில் மொத்தம் 730 மில்லியன் யூரோக்கள் உடன் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி 222வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.