பெங்களூர் அணிக்காக இந்தியா வந்த ரிஷி சுனக்: விஜய் மல்லையா தொடர்பில் சர்ச்சை
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியை காண்பதற்காக முன்னாள் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அஹமதாபாத் மைதானத்திற்கு வருகை தந்திருந்தார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய நிலையில், பெங்களூர் அணி வெற்றியீட்டியது.
இதில் பெங்களூர் அணிக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் ரிஷி சுனக் X தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
பண மோசடி
பெங்களூர் அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா, தற்போது பிரித்தானியாவில் தலைமறைவாகியுள்ளார்.
Let's go @RCBTweets 🏏 pic.twitter.com/iIIW7GFfKH
— Rishi Sunak (@RishiSunak) June 3, 2025
இவர் பண மோசடி வழக்கில் இந்திய அரசாங்கத்தால் தேடப்படும் ஒரு நபர் ஆவார். எவ்வாறாயினும், தற்போது ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் உரிமை யுனைடட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்திடம் உள்ளது.
இந்நிலையில், ரிஷி சுனக், ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளமை அனைவர் மத்தியிலும் பேசுபொருளாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




