டயகம சிறுமியின் மரணம் - மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படும் ரிஷாட்டின் மனைவி
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் மனைவி உள்ளிட்ட நால்வரும் இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள குறித்த நான்கு பேரும் 72 மணித்தியால தடுப்புக்காவலில் விசாரைணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், சிறுமியின் மரணம் தொடர்பில் இதுவரை 35பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
மேலும், குறித்த சிறுமியை தொழிலுக்கு அழைத்துவந்த தரகரின் பல்வேறு வங்கி கணக்குகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri