சமூகத்துரோகிகளுடன் கூட்டுச் சேரப் போவதில்லை: ரிசாத் பதியுதீன் திட்டவட்டம்
கோட்டாபய ராஜபகச ஆட்சியில் முன்வைக்கப்பட்ட இுருபதாம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்தவர்களுடன் எந்தக் கட்டத்திலும் கூட்டணி சேரப் போவதில்லை என முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நேற்றைய தினம் (06) மன்னார் மாந்தையில் இடம்பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் அதில் கலந்து கொண்டு கருத்து வெளிடும்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தவறு செய்தமை
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தவறு செய்தமைக்காக எமது கட்சியிலிருந்து விலக்கப்பட்ட சிலர், இன்று தாமாகவே கட்சியிலிருந்து வெளியேறியதாகக் கூறுகின்றனர்.
தவறு செய்தவர்கள் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்படுவர். இவ்வாறு தவறு செய்த மூன்று எம்.பிக்களை எமது கட்சி நீக்கியுள்ளது.
இதுபோலவே, கிண்ணியாவைச் சேர்ந்த ஒருவரையும் நாம் நீக்கியுள்ளோம். இன்று அவர் ரணிலுடன் இணைந்துள்ளார். அது மட்டுமல்ல கட்சியிலிருந்து அவர் தானாக வெளியேறியதாக ஊடகங்களுக்கு கூறுகிறார். மக்கள் ஆணையை மீறியவர்களுக்கு மக்களே பாடம்புகட்டுவர்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் எமது கட்சி அம்பாறை மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் போட்டியிடும். சில மாவட்டங்களில் தனித்தும் இன்னும் சில மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தும் போட்டியிடும். எம்மால் நீக்கப்பட்டவர்களைச் சேர்த்து உருவாக்கப்படும் கூட்டணியில் நாம் சேரமாட்டோம்” என தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல் - ஆசிக்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |