இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது ஹிஷாலினியின் சடலத்தை தோண்டியெடுக்கும் நடவடிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமியின் சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரிகள் குழு முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிறுமியின் சடலத்தை நேற்று தோண்டி எடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் இறுதியில் அந்த முயற்சிகள் கைவிடப்பட்ட நிலையில் சிறுமி புதைக்கப்பட்ட மயான பகுதிக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை நல்லடக்கம் செய்யப்பட்ட ஹிஷாலினியின் சடலம் எதிர்வரும் தினங்களில் தோண்டி எடுக்கப்படும் என டயகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
