றிசாட் பதியுதீன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவா! எழுந்துள்ள சர்ச்சை
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் (Risad Bathiudeen) ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) ஆதரவா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
வவுனியா, வைரவபுளியங்குளத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரச்சார கூட்ட மேடையை றிசாட் பதியுதீன் இன்று (31.08.2024) பார்வையிட்டுள்ளார். இதன் காரணமாகவே குறித்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
வவுனியாவிற்கு நாளைய தினம் வருகை தரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் மைதானத்தில் நடைபெறும் தேர்தல் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றார்.
பிரச்சார கூட்ட ஏற்பாடுகள்
அதற்கான ஏற்பாடுகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் குறித்த ஏற்பாடுகள் இடம்பெறும் இடத்திற்கு சென்ற றிசாட் பதியுதீன், அவற்றை பார்வையிட்டிருந்ததுடன், அங்கு நின்ற சிலருடன் உரையாடியும் இருந்தார்.

ஏற்கனவே, றிசாட் பதியுதீன், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு என அறிவித்த நிலையில், குறித்த இடத்திற்கு சென்று ரணில் விக்ரமசிங்கவின் பிரச்சார கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட்டமை அவரது ஆதரவு யாருக்கு என சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் அழகே அழகு தொடர்... புத்தம் புதிய சீரியல், யார் யார் நடிக்கிறார்கள் பாருங்க Cineulagam
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam
சவுதி அரேபியாவை அடுத்து... பல மில்லியன் டன் தங்க இருப்பைக் கண்டுபிடித்த மத்திய கிழக்கு நாடு News Lankasri