இனவாத தரப்புடன் இணைந்து செயற்படுகிறார் அநுர: றிஷாட் பதியுதீன் குற்றச்சாட்டு
மன்னார் - புத்தளம் பாதையை திறந்து மக்கள் பாவனைக்கு விடுவோம் என தேர்தல் வாக்குறுதி வழங்கிய அநுர அரசு, 15 வருடங்களுக்கு முன் அப் பாதைக்கு எதிராக, வழக்கு தாக்கல் செய்த இனவாத தரப்புடன் இணைந்து செயற்படுவது கண்டிக்ககூடியது என நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இன்று(05.02.2026) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
துரோகம் செய்த அநுர அரசு
இது தொடர்பில் அவர் அங்கு உரையாற்றும் போது, மன்னார் - புத்தளம் பாதையை திறந்து தருவோம் எனக் கூறிய அரசாங்கம் இன்று, நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த இனவாத தரப்புடன் இணைந்து அவர்களின் அமைச்சின் திணைக்களங்கள் கூறுவது வேடிக்கையானது.
இன்று நான் இல்லாத வேளையிலே, அமைச்சர் விமல் ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடைய கேள்விக்கு கூறிய பதில், நியாயமானதாக எனக்கு தெரியவில்லை.

விமல் ரத்நாயக்க மீது ஒரு பெரிய நல்லெண்ணம் கொண்டவனாக நான் இன்று வரை இருந்தேன். ஆனால், மன்னார்- புத்தளம் பாதை சம்பந்தமாக, அவருடைய கருத்து, ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.
சுமாராக நூறு வருடம் பழமை வாய்ந்த வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான B(பீ) வகையான பாதையே மன்னார்- புத்தளம் பாதை ஆகும். நான் அமைச்சராக இருந்த பொழுது, அந்த பாதையை மக்கள் பாவனைக்காக திறந்து வைத்தேன். அதற்கு முன்னர் நூறு (100) வருடங்களுக்கு முன்னால் அந்த பாதை, வீதி அபிவிருத்தி அதிகார சபை பாதையாக இருந்த பாதை.
100 வருடங்களாக மூடிக் கிடக்கும் பாதை
மேலும், எங்களை எல்லாம் அன்று அந்த மண்ணிலிருந்து, பயங்கரவாதம் வெளியேற்றிய பொழுது அந்தப் பாதையும் மூடப்பட்டது. அதன்பின்னர், அங்கு வாழ்ந்த மக்கள் எல்லாம் விரட்டி அடிக்கப்பட்டார்கள்.
இந்நிலையில், அந்தப் பகுதியில் யாரும் இல்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது என ஆக்ரோஷமாக சபையில் இன்றைய தினம் தங்கள் பக்கம் இருக்கும் நியாயங்களை எடுத்துரைத்துள்ளார்.
அதே போன்று, பாதை விடுவிப்பு தொடர்பில் அவர் வேறு என்னென்ன விடயங்களை சபையில் முன்வைத்துள்ளார் என்பதை காணொளியில் பார்க்கலாம்.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 2 நாட்கள் முன்
நீங்கள் சிரிக்கவே மாட்டீர்களா? பெண் செய்தியாளரை பார்த்து டிரம்ப் கேட்ட கேள்வி: வெடித்த புதிய சர்ச்சை News Lankasri
18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள் Manithan