மண்ணெண்ணை விலை அதிகரிப்பு - புத்தளம் கடற்றொழிலாளர்கள் ஆதங்கம்
புத்தளம் மாவட்டத்தின் சேராக்குளி மற்றும் காரைத்தீவு ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் தமது ஜீவனோபாயமாக கடற்தொழிலையே மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் மண்ணெண்ணையின் விலையேற்றம் காரணமாக தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
மண்ணெண்ணை விலையேற்றம்
மண்ணெண்ணையின் விலையேற்றம் காரணமாக கடந்த மூன்று மாதகாலமாக கடற்றொழிலை பலர் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாவும் அதில் ஒரு சிலர் தெப்பத்தில் சென்று மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகவும் கடற்றொழிலாளர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
முன்னர் இயந்திரப் படகிற்கு 5000 ரூபா கொடுத்து 40 லீற்றர் மண்ணெண்ணையைப் பெற்று கடற்றொழிலில் ஈடுபட்டால் சுமார் 10,000 ரூபாவிற்கு அதிகமான வருமானம் வந்ததாகவும், தற்பொழுது 17,000 ரூபா கொடுத்து 40 லீற்றர் மண்ணெண்ணையைப் பெற்று கடற்றொழிலில் ஈடுபட்டால் தமக்கு அதே 10,000 ரூபா வருமானம் தான் கிடைப்பதாக அங்கலாய்கின்றனர்.
மூன்று மடங்கு வரை அதிகரிப்பு
இதற்கு 2 இலட்சம் ரூபாவிற்கு வாங்கப்பட்ட இயந்திரப் படகு தற்பொழுது 6 இலட்சம் ரூபாவிற்கு மேலாக அதிகரித்து உள்ளதாகவும், இயந்திரங்களின் விலைகளும் மூன்று மடங்கு வரை அதிகரித்துள்ளதாகவும், மீன் பிடி வலைகளின் விலைகளும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய அரசாங்கம் மானிய விலையில் தமக்கு மண்ணெண்ணையை வழங்க வேண்டுமென்றும்
படகு மற்றும் இயந்திரங்கள் மற்றும் வலைகளின் விலைகளை குறைக்க வேண்டுமென்று
அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.