இலங்கையில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு
இலங்கையில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்றைய தினம் நான்கு மரணங்கள் தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையில் கோவிட் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 343ஆக உயர்வடைந்துள்ளது.
1. கொழும்பு - 3 பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதான ஆண் ஒருவர் 2021ம் ஆண்டு கடந்த 2ம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கோவிட் நிமோனியா மற்றும் அதிக இரத்த அழுத்தம் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
2. நாவல பிரதேசத்தைச் சேர்ந்த 89 வயதான ஆண் ஒருவர் தேசிய தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கோவிட் நிமோனியா, சிறுநீரக கோளாறு, இரத்தம் விசமாகியமை, நீண்ட நாள் இருதய நோய் மற்றும் அதிர்ச்சி காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
3. பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கோவிட் நிமோனியா காரணமாக ஏற்பட்ட இருதய செயலிழப்பு காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
4. மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதான பெண் ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். இரத்தம் விசமாகியமை, உடல் உறுப்புக்கள் செயலிழந்தமை மற்றும் கோவிட் நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய இந்த விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.






ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
