நாட்டில் மீண்டும் இனக்கலவரம் ஏற்படும் சூழ்நிலை: எச்சரிக்கின்றார் எதிரணி எம்.பி - செய்திகளின் தொகுப்பு
நாட்டில் மீண்டும் ஒர் இனக் கலவரம் ஏற்படுமா என்று ஐயம் எழுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மீண்டும் ஓர் இனக் கலவரம் ஏற்படுவதற்குரிய சூழ்நிலை காணப்படுவதாக இலங்கையை கண்காணிக்கும் இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிப்பதாக தமிழகத்தின் பத்திரிக்கையான தினமலர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இவ் விடயத்தை மேற்கோள் காட்டி நம் நாட்டு பத்திரிகைகளிலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் 13 ஆவது திருத்த சட்டம் நீக்கப்படும் என்ற கருத்துக்களும் நம் மத்தியில் உலாவுகின்றது.
அது அவ்வாறு நடந்தேறினால் நாடு பற்றி எரிவது உறுதி நாடு பிளவுபடுவதை தடுப்பதற்காகவே 13 ஆவது சேர்த்திருத்தம் உருவாக்கப்பட்டது .
13 நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் அனைத்துப் பேரணிகளுக்கும் பெருந்தொட்ட மலையக மக்கள் சார்பில் நான் என்னுடைய ஆதரவை முழுமையாக அளிப்பேன் மேலும் குருந்தூர் மலையில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வை தடுக்க பௌத்தர்களை அணிதிரளுமாறு ஒரு அமைச்சர் கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri