தகவல் அறியும் உரிமை ஆணையகத்தின் புதிய தலைவர் நியமனம்
இலங்கையின் தகவல் அறியும் உரிமை ஆணையகத்தின் தலைவராக சிரேஸ்ட செய்தியாளர் தயா லங்காபுர நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பு பேரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த வாரம் இந்த நியமனத்தை வழங்கினார்.
லங்காபுர துறையில் 60 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் வாய்ந்த ஒரு பத்திரிகையாளர்.
தகைமைகள்
அவர் 1965ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான 'அத்த' செய்தித்தாளில் தனது பத்திரிகை வாழ்க்கையைத் தொடங்கினார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற லங்காபுர, திவயின, சிலுமின, தினமின, ரிவிர மற்றும் லக்பிம செய்தித்தாள்களிலும், பிபிசியின் சந்தேசய சேவைகளிலும், அரசாங்க தகவல் திணைக்களத்திலும் பணியாற்றினார். அவர் நீண்டகால நாடாளுமன்ற செய்தியாளராகவும் செயற்படுகிறார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 16 ஆம் நாள் மாலை திருவிழா





முதல் மனைவி உடன் ஜோடியாக வந்த மாதம்பட்டி ரங்கராஜ்.. போட்டோ வைரல்! அப்போ இரண்டாம் மனைவி நிலை.. Cineulagam
