தகவல் அறியும் ஆணைக்குழுவும் அழுத்தங்களை எதிர்நோக்குகிறது: ஆணையாளர் பின்டோ ஜெயவர்த்தன
தகவல் அறியும் ஆணைக்குழுவும் அழுத்தங்களை எதிர் நோக்குகிறது என ஆணையாளர் கிசாலி பின்டோ ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முறைப்பாடுகளுக்கு தீர்வு
அவர் மேலும் தெரிவிக்கையில், "தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சில அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் என்பவற்றால் சில தகவல்களை வழங்கப்படாமை குறித்து ஆணைக்குழுவிற்கும் முறைப்பாடுகள் கிடைத்தன. அவை தொடர்பில் நாம் கவனம் செலுத்தி பல விடயங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
சில வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டு வெற்றி காணப்பட்டதுடன், 10 வரையிலான வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன.
ஆணைக்குழுக்கான அழுத்தங்கள்
கடந்த 3 ஆண்டுகளாக எமது செயற்பாடுகள் மந்த கதியில்
இருக்கின்றது. அதற்கு கோவிட் அச்சுறுத்தல் மற்றும் பொருளாதார நெருக்கடி என்பன
காரணமாகும். அத்துடன், ஏனைய ஆணைக்குழுக்களுக்கு இருப்பது போன்று எமக்கும்
அழுத்தங்கள் இருக்கிறது.
எமது ஆணைக்குழுவுக்கு ஒதுக்கப்படும் நிதியும் போதாது உள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை கிராம மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக நாம் செயற்பட்டு வருகின்றோம்.
தகவல்கள் தர மறுக்கப்படும் சந்தர்ப்பத்தில் தகவல்
அறியும் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்ய முடியும்.” என தெரிவித்துள்ளார்.
