தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும்...!

Parliament of Sri Lanka Sri Lanka Parliament Sri Lanka Politician Sri Lanka
By Sivaa Mayuri Mar 01, 2023 04:34 AM GMT
Report

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அறிவிப்புச் சட்டம் தொடர்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களில் உள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை அறிந்துகொள்ள முடியும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்றைய தினம் (27.02.2023) அறிவித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சம்பத் அபயகோன் மற்றும் பி.குமாரரட்ணம் ஆகிய இருவர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும்...! | Right To Information Act

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு

இதன் மூலம் ஊடகவியலாளர் ஒருவர் கோரிய, தமது சொத்துப் பிரகடனங்களை ஒப்படைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்ற தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தீர்மானத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களால் பராமரிக்கப்படுபவர்கள்.

அவர்கள் எல்லா நேரங்களிலும் நாட்டின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு, மற்றவர்கள் பின்பற்றுவதற்குரிய முன்மாதிரிகளை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் சட்டத்தின் விதிகளின் கீழ், சட்டத்தின் விதிகளின் கீழ் வரும் எந்தவொருவரும், தேவையான சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் தொடர்புடைய அறிவிப்பை வழங்கத் தவறினால், அபராதம் அல்லது விளக்கத்துடன் கூடிய சிறைத்தண்டனையுடன் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்தவராகக் கருதப்படுவார்.

அல்லது அபராதம் மற்றும் சிறைத்தண்டனை இரண்டும் விதிக்கப்படும் என நீதியரசர் அபேகோன் தமது தீர்ப்பின்போது குறிப்பிட்டுள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும்...! | Right To Information Act

மேன்முறையீட்டு நீதிமன்றம்

ஊடகவியலாளர் சாமர சம்பத், கோரிய தகவல்களைத் தமக்கு வெளியிட வேண்டும் என்ற தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தீர்மானத்தை எதிர்த்து நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தாக்கல் செய்த மனுவின் மீதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஊடகவியலாளர் சாமர சம்பத் 21-06-2018 திகதியிட்ட கடிதம்மூலம் 2018ஆம் ஆண்டு சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த பிரகடனங்களைக் கையளித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலைத் தமக்கு வழங்குமாறு நாடாளுமன்றத் தகவல் அதிகாரியிடம் கோரியிருந்தார்.

எனினும் அந்த அதிகாரி 21-08-2018 திகதியிட்ட கடிதத்தின் மூலம், 1975ஆம் ஆண்டின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் சட்டத்தின்படி, நாடாளுமன்ற சபாநாயகருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் கோரிக்கையை நிராகரித்திருந்தார்.

இந்தநிலையில் குறித்த அதிகாரியின் முடிவால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர், தகவல் அறியும் சட்டத்தின் 32ஆவது பிரிவின்படி தகவல் அறியும் ஆணையத்தில் மேன்முறையீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US