இலங்கை மின்சார சபையில் கேலிக்கிடமான கொடுப்பனவுகள்!
கேலிக்குரிய கொடுப்பனவுகள்
இலங்கை மின்சார சபையில் கொடுப்பனவுகளை செலுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட சில முறைகள் நகைப்புக்குரியவை என்று நாடாளுமன்ற கோப் குழுவின் தலைவர் சரித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
உதாரணத்துக்கு, மானியை வாசிப்பதை தவிர, மானியை சரியாக வாசிப்பதற்கும் கொடுப்பனவு செலுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, 2021 ஆம் ஆண்டில் இந்த கொடுப்பனவுகளாக 2,134.9 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் 1,544.4 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளன.
எனினும் இந்த பணம் பொதுமக்களின் பணம் என்பதால் அதற்கு பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும் என கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறைவரி வருமானத்தை விட மின்சார சபை செலவீனம் அதிகம்
இலங்கை மின்சார சபையின் வருடாந்த செலவினம் அனைத்து வரிகள் மூலம் உள்நாட்டு இறைவரி திணைக்களம் எதிர்பார்க்கும் வருமானத்தை விட அதிகமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், வரைவு கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில், இலங்கை மின்சார சபை, ஊழியர்களின் சம்பளத்தை 2021 ஆம் ஆண்டில் 25% ஆல் அதிகரித்துள்ளது.
இலங்கையில் நாளை மின்சார தடை இல்லை!

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
