துறைமுகங்களில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரிசி!
பல்வேறு காரணங்களினால் துறைமுகங்களில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கொள்கலன்களில் உள்ள 1 மில்லியன் கிலோ அரிசியை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று (12.10.2022) துறைமுகம் மற்றும் சுங்கப்பிரிவின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
காலதாமதக் கட்டணம்
காலதாமதக் கட்டணம் செலுத்தப்படாமை காரணமாக 79 கொள்கலன் அரிசித் தொகை விடுவிக்கப்படாமல் காணப்படுவதாகவும் துறைமுகங்களில் நிலவும் கடும் நெரிசலை குறைப்பதற்காக தற்போது சுங்கத்திணைக்களத்தில் உள்ள 950இற்கும் மேற்பட்ட கொள்கலன் தாமதக் கட்டணமின்றி விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் துறைமுகங்களில் காணப்படும் கொள்கலன்களில் அரிசியை மட்டுமன்றி கருங்கா, மஞ்சள் போன்ற பொருட்கள் கையிருப்பில் உள்ளதாகவும் அவற்றை முன்னுரிமை பட்டியலின் கீழ் வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.