நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்: ஆலை உரிமையாளர்கள் எடுத்துள்ள புதிய தீர்மானம்
ஒரு கிலோ நெல்லின் விலை இருபத்தி நான்கு ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய நேற்று (24.11.2022) நிலவரப்படி ஒரு கிலோ நெல் இருபத்தி நான்கு ரூபாவால் குறைக்கப்பட்டு 101 ரூபாவாக பதிவாகியுள்ளது.
விலை குறைப்பு
ஆலை உரிமையாளர்கள் ஒன்றரை மாதங்களுக்கு முன், ஒரு கிலோ நெல்லை 125 ரூபாவிற்கு கொள்வனவு செய்துள்ளனர்.
இதற்கமைய 64 கிலோகிராம் கொண்ட நெல் மூட்டையை 8000 ரூபாவிற்கு ஆலை உரிமையாளர்கள் கொள்வனவு செய்துள்ளனர்.
புதிய தீர்மானம்
இந்நிலையில் நேற்றைய தினம் ஒரு நெல் மூட்டையை 6500 ரூபாவிற்கு கொள்வனவு செய்துள்ளனர்.
எனவே இந்த பருவ அறுவடையின் போது விவசாயிகளிடம் இருந்து ஒரு மூட்டை நெல்லை 4500 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் பாரிய ஆலை உரிமையாளர்கள் மத்தியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.