அத்தியாவசிய பொருளொன்றின் விலை இன்று முதல் குறைப்பு! வெளியானது தகவல்
அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான அரிசியின் விலையானது இன்று முதல் குறைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
5 ரூபாவினால் குறையும் அரிசி விலை
இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலையை இன்று முதல் 5 ரூபாவினால் குறைக்குமாறு சதொச மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அரிசி இறக்குமதி இடைநிறுத்தம்! அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானங்கள் |
அதன்படி அரிசி சந்தைப்படுத்தல் சபையினால் விநியோகிக்கப்படும் அனைத்து அரிசிகளின் விலைகளும் இவ்வாறு குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
அரிசிகளின் விலை குறித்த விபரம்
அந்த வகையில் ஒரு கிலோகிராம் சம்பா 225 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் கீரி சம்பா 245 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோகிராம் 205 ரூபாவுக்கும், வெள்ளை மற்றும் சிவப்பு நாடு ஒரு கிலோகிராம் 215 ரூபாவுக்கும் இன்று முதல் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நாளை முதல் கொள்வனவு செய்யப்படவுள்ள நெல்லின் புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, ஒரு கிலோகிராம் நாடு நெல்லை 120 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பா நெல்லை 125 ரூபாவுக்கும், கீரி சம்பா நெல்லை 130 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யவுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
140 ரூபாவுக்கு ஒரு கிலோ கிராம் அரிசி |

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
