அரிசி இறக்குமதி இடைநிறுத்தம்! அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானங்கள்
நாட்டில் அரிசி உற்பத்தி உபரியாகியுள்ளமையால், அரிசி இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று மாலை கூடிய அமைச்சரவையில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“பெருப்போக பருவத்துக்கான நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசாங்க அனுமதியின் அடிப்படையில் போதியளவு அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி அரிசி இறக்குமதியாளர்கள் போதியளவு இருப்புக்களை சேமித்து வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அரிசி இறக்குமதியை இடைநிறுத்த வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
மின்சார சபை மீள்கட்டமைப்பு
இதேவேளை மின்சார சபையை மீளமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கென குழு ஒன்று நியமிக்கப்பட்டு அந்த குழுவினர், ஒரு மாதத்திற்குள் அவர்களின் பரிந்துரைகளை வழங்குவர்.
இதற்கிடையில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
திட்டங்களுக்கான திருத்தப்பட்ட கட்டண விகிதங்களுக்கும் ஒப்புதல்
அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.