குறைந்த விலையில் அரிசி - அமைச்சர் அறிவிப்பு
இந்தியாவிலிருந்து கீரி சம்பா அரிசியை ஒத்த, ஜீ.ஆர் ரக அரிசியை இறக்குமதி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள மாஃபியாக்களை ஒழிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி ஒரு கிலோகிராம் 250 ரூபாய்க்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.
அரிசி இறக்குமதி
இந்தியாவிலிருந்து 40ஆயிரம் மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்படும். சிறுபோக அறுவடையின் பின்னர் நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படாது.
எனினும், சீரற்ற வானிலை மற்றும் ஏனைய காரணங்களால் அவை தடைப்படுமிடத்து, அரிசி இறக்குமதி செய்யப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி.. 45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை Cineulagam
