அரிசி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
உள்நாட்டு அரிசி வகைகள் அனைத்தினதும் சில்லறை விலை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிவப்பு பச்சை அரிசியின் விலை 18 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளதாக ஹெக்டர் கொப்பாகடுவ விவசாய ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள உணவு விலை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில்லறை விலை
மேலும் 2024-2025 பெரும்போக அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து நெல் வகைகளினதும் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
விநியோகம் குறைவடைந்துள்ள காரணத்தினால் நாடு அரிசியின் விலை 4 முதல் 5 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
நாடு அரிசி ஒரு கிலோ கிராம் 230 முதல் 240 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விற்பனை
மேலும் சம்பா மற்றும் சிவப்பு பச்சை அரிசி வகைகளுக்கு சந்தையில் தட்டுப்பாட:டு நிலை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது நாடு அரிசியின் மொத்த விற்பனை விலை உயர்வடைந்துள்ளதாகவும், சிவப்பு அரிசியின் சில்லறை விலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.